ஐந்தே நிமிடங்களில் சுருண்ட மேன்சிட்டி குழு

லெஸ்டர்: இந்த பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் மான்செஸ்டர் சிட்டி குழு முதன் முறையாகத் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோற்றுள்ளது. அத்துடன், நேற்று அதிகாலை லெஸ்டர் சிட்டியுடனான ஆட்டத் தில் முதல் ஐந்தே நிமிடங்களில் இரண்டு கோல்கள் போடவிட்டு லெஸ்டர் சிட்டி குழுவிடம் மேன்சிட்டி சிக்கித் திணறியது. பின்னர் ஆட்டத்தின் 20ஆம் நிமிடத்தில் ஏற்கெனவே ஒரு கோல் போட்டு தான் மீண்டும் பிரிமியர் லீக் குழுக்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கப் போவதை எடுத்துக்காட்டும் வித மாக அதன் நட்சத்திர ஆட்டக் காரர் ஜேமி வார்டி மான்செஸ்டர் சிட்டி கோல்காப்பாளரை தாண்டி தமது இரண்டாவது கோலை போட்டார்.

பின்னர், ஆட்டத்தின் 78ஆம் நிமிடத்தில் மேன்சிட்டி குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் ஜான் ஸ்டோன்ஸ் பின்னாலுள்ள தமது கோல்காப்பாளரை நோக்கி உதைத்த பந்தை இடைமறித்து கோல்காப்பாளரைத் தாண்டி குறுகிய இடைவெளியில் மூன்றா வது கோலைப் போட்டார். அந்த நிலையில், லெஸ்டர் சிட்டி குழு 4=0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தது. ஆட்டத்தின் கடைசி பத்து நிமிடங்களில் மான்செஸ்டர் சிட்டி குழு இரண்டு கோல்கள் போட்டு இறுதியில் 2=4 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியது. நேற்றைய ஆட்டத்தைத் தொடர்ந்து லெஸ்டர் குழு இதற்கு முன் ஐந்து ஆட்டங்களில் வெற்றி பெறாத நிலையிலிருந்து மீண் டுள்ளது.

நேற்று அதிகாலை மான்செஸ்டர் சிட்டி குழுவுடன் நடைபெற்ற போட்டியில் தமது பழைய கோல் போடும் திறனைத் திரும்பப் பெற்றிருக்கும் லெஸ்டர் சிட்டியின் ஜேமி வார்டி, 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஃபிலீட்உட் என்ற குழுவுக்கு எதிராக ஒரே ஆட்டத்தில் மூன்று கோல்கள் போட்ட சாதனையை நேற்று மீண்டும் நிகழ்த்தினார். படத்தில் கோல்காப்பாளரைத் தாண்டி தமது மூன்றாவது கோலைப் போடுகிறார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!