கிராமங்களில் அதிக ‘ஏடிஎம்’ பணத் தட்டுப்பாட்டை போக்கும்

வகையிலும் வங்கிகளில் கணக்கு திறப்பதை மக்களிடம் ஊக்குவிக் கவும் கிராமப்புறங்களில் ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ இந்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் தலா இரண்டு ஏடிஎம்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கிராமங் களில் செயல்படும் பொதுச் சேவை மைங்களில் 10,000 ஏடிஎம் இயந்திரங்களை நிறுவி பணப் பட்டுவாடா செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக இடத் தேர்வு பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஊழலை ஒழிப்பதற்காகவும் பண மில்லாப் பரிவர்த்தனைகளை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. கடன் அட்டைகள், இணைய வங்கிப் பரிவர்த்தனைகள் போன்ற வங்கிச் சேவைகளை பயன்படுத்து மாறு மத்திய அரசு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மின் னிலக்கப் பரிவர்த்தனையில் ஈடு படுவோருக்குப் பல்வேறு சலுகை களையும் அறிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!