முறைகேடுகளில் ஈடுபடும் வங்கிளுக்கு கடும் எச்சரிக்கை

புதுடெல்லி: முறைகேடுகளில் ஈடுபடும் வங்கி ஊழியர்களைச் சும்மா விடமாட்டோம். வங்கி களில் நடக்கும் தவறுகளை மத்திய அரசு கூர்ந்து கண் காணித்து வருகிறது என நிதியமைச்சு எச்சரித்துள்ளது. செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்த இம்மாதம் 30ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் பல வங்கிகளில் செல்லாத நோட்டுகள் முறைகேடாக மாற்றப் படுவதாகவும் கோடிக்கணக்கில் கணக்கு வைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. பல வங்கிகளில் நடந்த அதிரடி சோதனைகளில் போலிக் கணக்குகளில் பல நூறு கோடி ரூபாய் கறுப்புப் பணம் சிக்கியது. பொதுத்துறை வங்கிகளில் நடந்த சோதனைகளை அடுத்து 27 மூத்த அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். முறைகேடுகளில் ஈடுபட்ட ஆறு பேர் இடமாற்றத் துக்கு ஆளாகினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!