குழந்தைகளுக்கு ஆறுதலாய் அமைந்த கிரிக்கெட் போட்டி

எச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காகவும் அவர்களின் மேம்பாட்டுக்காக வும் நிதி திரட்டும் வகையில் 'ஜஸ்ட் கிரிக்கெட்' என்ற போட்டி சென்னையில் நடத்தப்பட்டது. இதில் 32 அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் நடந்த பரிசளிப்பு நிகழ்வில் நடிகர்கள் ஷாம், பரத், ஸ்ரீகாந்த், பிரசன்னா, நரேன், அசோக், சந்தோஷ், நடிகைகள் சினேகா, சங்கீதா கிரிஷ் ஆகியோர் கலந்துகொண்ட னர். 'சென்னை 600028', 'பழைய வண்ணாரப்பேட்டை', 'விழித்திரு' படக்குழுவினரும் உற்சாகப்படுத்தி னர். இந்நிகழ்வில் சினேகா பந்து வீச பிரசன்னா பேட்டிங் செய்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். ஷாம் குழந்தைகள் பாடிய பாடலுக்கு கண்கலங்கி ஆறுதல் கூறினார். நடிகர் பிரசன்னா குழந்தைகளிடையே பேசும்போது, "நீங்கள் யாரும் தனிப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம்," என்றபோது குழந்தைகள் நெகிழ்ந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!