சசிகலாவை சந்திக்கும் அதிமுக நிர்வாகிகள்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது தோழியான சசிக லாவை அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லத்தில்தான் சசிகலா தற்போது தங்கியுள்ளார். அங்கிருந்தபடியே அவர் அதிமுக தலை வர்களுடன் பல்வேறு ஆலோசனை களை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் சென்னை மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத் திற்குச் சென்று மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர், பின்னர் சசிகலாவைச் சந்தித்தனர். அப்போது துக்கம் தாளாமல் பலர் கதறி அழ, சசிகலாவும் கண்ணீர் விட்டார். பின்னர் நிர்வாகிகளை கட்சிப் பணிகளைக் கவனிக்குமாறு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். (படம்)

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!