முழு விழிப்புநிலையில் இந்தோனீசிய போலிசார்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் தலைநகர் ஜகார்த்தாவின் ஆளுநர் பாசுக்கி என்பவருக்கு எதிரான சமய நிந்தனைக் குற்றச்சாட்டால் அண்மைய மாதங்களில் மதத் தீவிரவாதிகள் அங்கு பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்தக் குற்றச் சாட்டு தொடர்பாக இன்று வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று முதலே ஜகார்த்தா போலிசார் முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை இந்தோனீசியொ இன்று பொது விடுமுறை நாளாகக் கடைப்பிடிக்கிறது. இந்தோனீசியாவில் பொது வாகவே இதுபோன்ற விழாக் காலங்களில் உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்டுவது வழக்கம் என்றபோதிலும் சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் கிறிஸ்துவர்கள் மீது தாக்குததல் நடத்தப்பட்டதாலும் அதிபர் மாளிகை உட்பட முக்கிய இடங் களைக் குறிவைத்து தாக்க பயங்கரவாதக் குழுக்கள் திட்ட மிட்டுள்ளது அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாலும் போலிசார் மிகுந்த கவனத்துடன் இருப்ப தாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!