துப்புரவுப் பணியாளர்களின் அடிப்படை சம்பளம் அடுத்த மூன் றாண்டுகளில் $200 உயரவுள் ளது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஆண்டுதோறும் மூன்று விழுக் காடு சம்பள உயர்வு கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2020ஆம் ஆண்டு முதல் குறைந்தது 12 மாதங்கள் துப்புரவுத் தொழிலில் ஈடுபடுவோ ருக்கு ஆண்டு ஊக்கத்தொகை யாக (போனஸ்) இரு வார சம்பளம் வழங்கப்படும். இது ஆண்டுக்கு ஒரு தடவையாகவோ அல்லது இரு தடவைகளாகவோ வழங்கப் படலாம். துப்புரவுப் பணியாளர்களுக் கான முத்தரப்புக் குழுமம் நேற்று முன் வைத்த இந்தப் புதிய பரிந் துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்மூலம், 1,200க்கும் மேற் பட்ட துப்புரவுத் தொழில் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் 40,000க்கும் அதிகமான துப்புரவுத் துறை ஊழியர்கள் பயனடைவர்.
தேசிய தொழிற்சங்க காங்கிரரின் உதவித் தலைமைச் செயலாளரும் துப்புரவுப் பணியாளர்களுக்கான முத்தரப்புக் குழுமத்தின் தலைவருமான திரு ஸைனல் சப்பாரி (நடுவில்) துப்புரவுப் பணியாளர்கள் சிலருக்கு அவர்களுக்கான சம்பள உயர்வு பற்றி விளக்கமளிக்கிறார். படம்: பெரித்தா ஹரியான்