லிவர்பூலைக் காத்த ஒரிகி

லிவர்பூல்: ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்திலேயே கோலடித்து முன்னிலைக்குச் சென்றபோதும் பின் முதற்பாதியிலேயே இரு கோல்களை விட்டுத் தந்து பின்தங்கி, அதன்பின் இரண்டாம் பாதியில் ஆட்டத்தில் சமநிலை கண்டு, கணிக்க முடியாத குழு வாகத் திகழந்து வருகிறது லிவர்பூல் காற்பந்துக் குழு. பெல்ஜிய ஆட்டக்கார டிவோக் ஒரிகி 49வது நிமிடத்தில் அடித்த கோலால் வெஸ்ட் ஹேம் யுனை டெட் குழுவிற்கு எதிரான ஆட் டத்தைச் 2-2 என லிவர்பூல் சமன்செய்தது. பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் செல்சியைவிட ஆறு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள லிவர்பூல், கடந்த பருவத்தில் வெஸ்ட் ஹேமுக்கு எதிரான நான்கு ஆட்டங்களில் ஒரு கோலை மட்டுமே போட்டது. இருப்பினும், இம்முறை 5வது நிமிடத்திலேயே அது தன் கோல் கணக்கைத் தொடங்கியது. சாடியோ மானே அனுப்பிய பந்தைச் சாதுரியமாக வலைக்குள் திருப்பிவிட்டார் ஆடம் லலானா.

வெஸ்ட் ஹேம் யுனைடெட் வீரர் வின்ஸ்டன் ரீடுடன் (இடது) பந்துக்குப் போராடும் லிவர்பூலின் டிவோக் ஒரிகி. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!