கோஹ்லி: தித்திக்கும் வெற்றி

மும்பை: அண்மைக்காலமாக இந்திய அணி பெற்ற வெற்றிகளில் இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது போட்டியில் பெற்றதே இனிப்பான வெற்றி என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் விராத் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார். முதல் போட்டி டிராவில் முடிய, அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றியை ருசித்த இந்திய அணி தொடரையும் 3-0 எனக் கைப்பற் றியது. இன்னிங்ஸ் வெற்றியைத் தவிர்க்க இங்கிலாந்து அணி இன்னும் 49 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில் நேற்று ஐந்தாம் நாளில் அவ்வணி மேலும் 13 ஓட்டங்களை மட்டும் சேர்த்து மீதமிருந்த நான்கு விக்கெட்டு களையும் பறிகொடுத்தது. இதை அடுத்து, இந்திய அணி இன் னிங்ஸ் மற்றும் 36 ஓட்ட வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் எட்டு ஓவர்களிலேயே இங்கிலாந்தின் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தை வென்ற விராத் கோஹ்லி (இடது) தலைமையிலான இந்திய அணி, போட்டி முடிந்தபின் சிரித்து மகிழ்ந்தபடி திடலை வலம் வந்து ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!