இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் லேசர் சுவர்

பஞ்சாபில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இம்மாதம் 18ஆம் தேதி லேசர் வீச்சு, சிவப்புக் கதிர்களால் அடைக்கப்பட உள்ளது என்று எல்லைப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன. பாதுகாப்பு மீறல் களைத் தடுக்கும் நோக்கில் 41 இடங்களில் கண்காணிப்புக் கருவிகளும் பொருத்தப்பட்டு வருகின்றன. லேசர் சுவர்கள் செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தில் செயல்படுபவை என்பதால், இவற்றின் மூலம் அனைத்துலக எல்லைப் பகுதிகளில் தீவிர வாதிகள் ஊடுருவலை எளிதில் கண்காணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழில்நுட்பம் மூடுபனி காலங்களிலும் வேலை செய்யும் திறனுடன் உருவாக்கப் பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களால் இந்த ஆண்டில் மட்டும் நவம்பர் மாதம் வரையில் 78 பாதுகாப்புப் படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 213 பேர் காயமடைந்து உள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்புப் படைகள் கூறின. கடந்த நான்காண்டு களில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் எனக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!