சிங்கப்பூர், மலேசியத் தலைவர் களின் 7வது ஓய்வுத்தள சந்திப் பில் கலந்துகொள்வதற்காக பிரதமர் லீ சியன் லூங் இன்று மலேசியாவின் நிர்வாகத் தலை நகரான புத்ராஜெயாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான இந்த வருடாந்திர சந்திப்பு இரு பிரதமர்களும் சந்தித்து இரு நாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்திகொள்ள நல்ல தளமாக அமைந்துள்ளது.
பிரதமர் லீ சியன் லூங்கை மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்று மாலை புத்ராஜெயாவிலுள்ள தனது அலுவலகத்தில் வரவேற்பார். இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்துவார்கள். இந்தச் சந்திப்பு முதலில் இம்மா தம் 5ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சிங்கப்பூர் தரப்பு தங்கள் அதி பரிடம் இத்திட்டம் குறித்து ஒப்பு தல் பெறுவதற்கு கால அவகாசம் கேட்டதால் இந்த ஒத்திவைப்பு ஏற் பட்டது என்று மலேசியப் பிரதமர் நஜிப், கடந்த வாரம் இஸ்கந்தர் புத்ரிக்கு சென்றிருந்தபோது செய்தி யாளர்களிடம் தெரிவித்திருந்தார்.