புயலால் முடங்கிய சென்னை

வர்தா புயலால் நேற்று சென்னை கடும் பாதிக்குப்பு உள்ளானது. புயலோடு பெய்த பெரு மழையினால் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதி களில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு, இயல்பு நிலை முற்றிலும் முடங்கியுள்ளது. புயலினால் இருவர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயம் அடைந்தனர் என்றும் முன்னதாக வந்த செய்திகள் தெரிவித்தன. மின் இணைப்புப் பாதிக்கப்பட்டதால் சென்னை இருளில் மூழ்கியது.

சாலை, வான்வெளி, ரயில் என எல்லா விதமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள் ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்துள் ளன. பெரு மழையினால் சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக் கின்றன. விழுந்த மரங்களை அகற்றவும் மழை நீரை அப்புறப்படுத்தவும் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வர்தா புயலின் மையப்பகுதி நேற்று பிற்பகல் இந்திய நேரப்படி 3.30 மணியளவில் சென்னைத் துறைமுகம் பகுதியில் கரையைக் கடந்தது. இந்திய நேரம் மாலை 6.30 மணி யளவில் புயல் முற்றிலும் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோ மீட்டர் இருந்ததாகவும் புயல் கரையைக் கடந்தபோது 192 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியதாகவும் கூறப்பட்டது.

சென்னை சாலையில் வேரோடு சாய்ந்துகிடக்கும் மரத்தை அப்புறப்படுத்தும் மீட்புப் பணியாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!