டமாஸ்கஸ்: போராளிகள் வசம் உள்ள அலெப்போ நகரை முழுமையாகக் கைப்பற்ற அரசாங்கப் படையினர் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலுக்கு அந்நகர மக்கள் பலர் பலியாகி வருகின் றனர். சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படையினர், ரஷ்ய விமானப் படைகளின் ஆதரவுடன் அலெப்போ நகரில் முன்னேறிச் செல்லும் வேளையில் போராளிகள் பின்வாங்கத் தொடங்கிவிட்டனர். போராளிகளிடம் எஞ்சியுள்ள பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு அரசாங்கப் படையினர் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசித் தாக்கி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் கடும் சண்டை நடந்து வரும் பகுதியில் சிக்கிக் கொண்ட மக்கள் அவதியுற நேர்ந் துள்ளது.
அரசாங்கப் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வரும் பகுதியிலிருந்து ஒருவர் ஒரு குழந்தையுடன் தப்பிச் செல்கிறார். அலெப்போ நகரில் இன்னும் 50,000 பேர் சிக்கிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. போர் விமானங்களின் குண்டு வீச்சிலிருந்து உயிர் தப்ப அங்கிருந்து பலர் தப்பியோடுவதாக தகவல்கள் கூறுகின்றன. படம்: ராய்ட்டர்ஸ்