ஜகார்த்தா: இஸ்லாத்தை அவமதிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று கண்ணீருக் கிடையே அஹோக் என்று அழைக்கப்படும் ஜகார்த்தா ஆளுநர் பாசுக்கி ஜஹஜா புர்னாமா கூறியுள்ளார். ஜகார்த்தா ஆளுநர் பாசுக்கிக்கு எதிரான சமய நிந்தனை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அவருக்கு எதிரான விசாரணை யின்போது நீதிமன்றத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான தீவிரவாதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு சீன வம்சாவளியினரான பாசுக்கி, தேர்தலில் தம்மை எதிர்த்து நிற்பவர்கள் குர்ஆனைப் பயன்படுத்துவதாக தாம் விமர்சித்தபோது இஸ்லாத்தை அவ மதிக்கவில்லை என்று கூறினார். "குர்ஆன் வாசகத்தை மொழிபெயர்த்துக் கூறவோ இஸ் லாத்தை அவமதிக்கும் எண்ணமோ எனக்கில்லை. "எனது விமர்சனம் இஸ் லாத்தைத் தவறாகப் பயன்படுத்தி நியாயமற்ற முறையில் தேர்தலில் வெற்றி பெற எண்ணும் நெறி தவறிய அரசியல்வாதிகளுக்கு எதிரானது. "ஒருவேளை நான் பயன்படுத்திய வார்த்தைகள் எனது எண்ணத்துக்கு மாறான கருத்தை நான் கொண் டிருப்பதற்கான தோற்றத்தைத் தந்திருக்கலாம்," என அஹோக் என பிரபலமாக அழைக்கப்படும் பாசுக்கி கூறினார்.
விசாரணை தொடங்குவதற்கு முன்பு நீதிமன்றத்திற்குள் நுழைந்த ஜகார்த்தா ஆளுநர் பாசுக்கி. படம்: ஏஎஃப்பி