சுதாஸகி ராமன்
பதின்ம வயதின்போது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றங் கள், மற்ற இளையர்களோடு பழகும்போது அவர்களில் ஒருவராக இருக்கவேண்டும் எனும் விருப்பம் ஆண், பெண் உறவுகள், கல்வி போன்ற பல்வேறு அனுபவங்களை இளையர்கள் எதிர்நோக்குகின்றனர். அவற்றோடு வரும் சவால்களை சமாளிக்க முடியாமல் தத்தளிக்கும் இளையர்கள் சில வேளைகளில் பதற்றம், மன அழுத்தம் ஆகிய மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். சிங்கப்பூரில் மனநலப் பிரச்சினைகளுடைய இளையர் களின் எண்ணிக்கை சரியாக கணக்கிடமுடியாது என்றாலும் உலகளவில் ஏழத்தாழ ஐந்தில் ஓர் இளையருக்கு வாழ்நாளில் ஏதாவது ஒரு மனநலப் பிரச்சினை யால் பாதிக்கப்படுகிறார்கள்.
நம்பிக்கையற்ற, உதவியற்ற சூழ்நிலையில் தனிமை என்று பல உணர்ச்சிகளை அவர்கள் அப்போது உணர்கின்றனர். இவ் வாறு பல இளையர்கள் மனநல பிரச்சினைகளைச் சந்தித்தாலும் அவற்றுக்கான உதவியை மிக குறைவான இளையர்கள் நாடு கின்றனர் என அறியப்படுகிறது.