மும்பை: மும்பையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன் படுத்தாததால் தமது அணி தோல்வியின் பிடியில் சிக்கியதாக இங்கிலாந்து அணித் தலைவர் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார். நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அபாரப் பந்துவீச்சில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியின் தோல்வி குறித்து இங்கிலாந்து அணித் தலைவர் அலெஸ்டயர் குக் கருத்துரைத்தார். "வாய்ப்பைத் தவறவிட்ட மற்றோர் ஆட்டம் இதுவாகும். முதல் இன்னிங்சில் 400 ஓட்டங் கள் சேர்த்தது போதுமான ஓட்ட எண்ணிக்கையாகும். இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ஓட்டங்கள் எடுத்து இருந்த நாங்கள் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை இன்னும் உயர்த்தி இருக்கலாம்.
நான்காவது டெஸ்ட்டில் தோல்வியைத் தவிர்க்கப் போராடிய இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் (இடது), ஜேம்ஸ் ஆண்டர்சன். படம்: ராய்ட்டர்ஸ்