ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிய வங்கி மூத்த அதிகாரி கைது

பெங்களூரு: பெங்களூருவில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியதாக ரிசர்வ் வங்கி யின் மூத்த சிறப்பு உதவியாளர் ஒருவர் சிபிஐ எனப்படும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் சுமார் 1.51 கோடி ரூபாய் பழைய நோட்டுகளைப் புதிய நோட்டு களாக மாற்ற இடைத்தரகர் களுக்கு உதவி செய்தது விசா ரணையில் தெரியவந்துள்ளது. செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டு களைச் சட்டவிரோதமாக மாற்றி யது தொடர்பாக கர்நாடகாவில் அமலாக்க அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப் போது ரூ. 93 லட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பண முதலைகள் கைது செய்யப்பட்டுள்ள இடைத் தரகர் களிடம் குறிப்பிட்ட கமிஷனை கொடுத்துப் பணத்தை மாற்றி உள்ளனர் என்றும் இவர்கள் வங்கி அதிகாரிகளையும் இந்த குற்றத்தில் ஈடுபட சம்மதிக்க வைத்துள்ளனர் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!