புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லி, பெங்களூரு, கோவா, தானே, சண்டிகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கோடிக் கணக்கில் பழைய, புதிய பணம் பெட்டி பெட்டியாகச் சிக்கியது. பெங்களூருவில் நடத்திய சோதனையின்போது ரூ.2.25 கோடி மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளும் டெல்லியில் உள்ள கரோல் பாக் தங்கும் விடுதியில் நடத்திய சோதனையின்போது மூன்று கோடிக்கும் மேலான பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளும் நேற்று காலையில் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே, இரண்டு கோடிக்கும் மேலான பணத்தில் பெரும்பாலானவை புதிய நோட்டு களாக இருந்த நிலையில் சண்டி காரில் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. அத்துடன் கோவாவில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் ரூ.68 லட்சம் புதிய ரூபாய் நோட்டு களை வைத்திருந்த நிலையில் பிடிபட்டனர்.
டெல்லி கரோல் பாக் தங்கும் விடுதியில் வருமான வரித்துறையினரும் குற்றப் பிரிவு காவல்துறையினரும் நடத்திய திடீர் சோதனையில் ரூ.3.25 கோடி மதிப்புடைய பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. இந்த ஐவரையும் கைது செய்த போலிசார் பணத்தையும் பறிமுதல் செய்தனர். படம்: ஊடகம்