ஆபாசக் காணொளியால் அமைச்சர் பதவி விலகினார்

பெங்களூரு: அரசு அலுவலத் துக்குள் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருந்ததாக வெளி யான சர்ச்சையை அடுத்து கர்நாடக மாநில கலால்துறை அமைச்சர் தனது பதவியை விட்டு நேற்று விலகினார். தனது பதவி விலகல் கடிதத்தை முதல் அமைச்சர் சித்தராமையாவுக்கு அனுப்பிவிட்டதாக அவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். கர்நாடக மாநில அரசின் கலால்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் எச்.ஒய்.மேட்டி. அண் மையில் இவர்மீது குற்றம்சாட்டி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பெண் ஒருவர், அரசு அலுவலகத் துக்குள் அமைச்சர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மேட்டி மறுத்திருந்தார். இந்நிலையில், அரசு அலுவலகத் தில் அவர் அந்தப் பெண்ணுடன் ஆபாசமாகத் தோன்றும் காணொளிக் காட்சிகள் நேற்று காலை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளி யாக தனது அமைச்சர் பதவியை விட்டு விலகி உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!