தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகள் 2017ல் 17,000

தேவைக்கு ஏற்ப கட்டித்தரப்படும் வீடுகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு கொஞ்சம் குறையும். 2017ல் இத்தகைய 17,000 வீடுகள் விற்கப்படும் என தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தனது வலைப்பதிவில் நேற்றுத் தெரிவித் தார். இத்தகைய வீடுகளின் எண் ணிக்கையைப் படிப்படியாக குறைத்து வருகிறோம் என்றாலும் தேவை பூர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்துவோம் என்று திரு வோங் குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஆண்டில் தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் 18,000 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. கடந்த 2011க்கும் 2013க்கும் இடையில் ஆண்டுதோறும் இத் தகைய 25,000 வீடுகள் விற் பனைக்கு வந்தன. இதனுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இத்தகைய வீடு களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதற்கிடையே, இளம் தம்பதி யினருக்காக வேகமாகக் கட்டப் பட்டு வரும் அடுக்குமாடி வீடுகள் 2018 வாக்கில் தயாராகிவிடும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!