சுகாதார மேம்பாட்டு வாரியம், 'லேடிஸ் ஃபர்ஸ்ட்' என்ற உள் ளூர் பெண்கள் சமூக அமைப்பு டன் சேர்ந்து 2017 உடல்நல நாட் காட்டியை உருவாக்கி இருக் கிறது. குறிப்பாக பெண்களை இலக்காக வைத்து இது தயாரிக் கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூர், நீரிழிவு நோய்க்கு எதிராக போர் தொடுத்திருப்பதைக் கவனத்தில்கொண்டு அதற்கு ஆதரவாக இந்த நாட்காட்டி நீரிழிவு நோயைத் தடுப்பது பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. மக்கள் அன்றாட நடைமுறை யில் கைக்கொள்ளக்கூடிய சுகா தாரத் தகவல்கள், உடலுக்கு ஏற்ற உணவுகளைத் தயாரிக்க உதவும் குறிப்புகள் எல்லாம் இதில் அடங்கி இருக்கின்றன. இவை எல்லாம் பெண்கள் தங்களைக் கவனித்துக்கொள்ளவும் தங்கள் குடும்பங்களைக் கவனித்துக் கொள்ளவும் உதவும். நீரிழிவுக்கு எதிரான போராட் டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கழகம், அடித்தள அமைப்புகளுக்கு ஊக்கமூட்டி, சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் நாட்காட்டியைச் சமூக நடவடிக்கைகளில் பயன் படுத்துமாறு அவற்றைக் கேட்டுக் கொள்ளும்.
(இடமிருந்து) மக்கள் கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆங் ஹாக் செங், 'லேடிஸ் ஃபர்ஸ்ட்' அமைப்பின் திருவாட்டி மெலிசா டான், சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர், சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாகி ஸி யோங் காங் ஆகியோர். படம்: சுகாதார மேம்பாட்டு வாரியம்