தனியார், வீவக வீடுகள் வாடகை நவம்பரில் 0.8% குறைவு

தனியார் வீடுகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் ஆகிய வற்றுக்கான வாடகைக் கட்டணச் சரிவு நவம்பர் மாதம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. இவை அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் முறையே 0.8% மற்றும் 0.9% குறைந்தன என்று எஸ்ஆர்எக்ஸ் சொத்துச் சந்தை நிறுவனம் நேற்று தெரிவித்தது. கூட்டுரிமை வீடுகள், தனியார் அடுக்குமாடி வீடுகளுக்கான வாடகைகள் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக நவம்பரில் குறைந்தன. எல்லா இடங்களிலுமே வாடகை யில் குறைவு இருந்தது. பிரதான வட்டாரங்களில் இந்தக் குறைவு 0.7%. நகரின் விளிம்பிலும் இதர பகுதிகளிலும் இருக்கும் வீடுகளுக்கான வாடகை 0.9% இறங்கியது. ஆண்டுக்காண்டு அடிப்படை யில் பார்க்கையில் சென்ற மாத வாடகை 2015 நவம்பருடன் ஒப் பிடுகையில் 4.5% குறைவு. கடந்த 2013 நவம்பர் வாடகை நிலவரத்துடன் ஒப்பிடுகையில், சென்ற மாதம் இவ்வீடுகளுக்கான வாடகை 18.9% குறைந்தது.

அங் மோ கியோ வீவக வீடுகள் பின்னணியில் இருக்க, மேஃபிளவர் கார்டன்ஸ் தனியார் வீடுகள். தனியார், வீவக வீடுகளுக்கான வாடகை தொடர்ந்து குறைந்து வருகிறது. நவம்பர் மாதம் இந்தக் குறைவு கொஞ்சம் கூடி 0.8% ஆக இருந்தது. கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!