புயலின் பாதிப்பால் பயிற்சி ஆட்டம் ரத்து

சென்னை: இந்தியா - இங்கி- லாந்து அணிகளுக்கு இடை- யேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப் பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நாளை தொடங்கவுள்ளது. இதற்கிடையே, வார்தா புயல் சென்னையைக் கடுமையாக தாக் கியது. புயலின் கோர தாண்ட வத்தில் சேப்பாக்கம் திடலும் தப்பிக்கவில்லை. அங்குள்ள உயர் கோபுரத்தில் உள்ள மின் விளக்குகள் பல காற்றில் பறந்து சிதறின. ரசிகர்கள் அமரும் இருக்கைகள் ஆங்காங்கே இடம் பெயர்ந்துள்ளன.

திடலைச் சுற்றிலும் இருந்த நூற்றுக்கணக் கான மரங் கள் வேராடு பெயர்ந்து கிடக்கின் றன. அவற்றையெல்- லாம் அப் புறப் படுத்த வேண்டும். வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபடத் திட்டமிடப் பட்டு இருந்- தது. ஆனால் பயிற்சி ஆடுகளம் தயாராக இல்லாததால் அந்த வலைப் பயிற்சி ரத்து செய்யப்- பட்டுள்ளது. இதனை இரு அணி வீரர்களும் ஏற்றுக் கொண்டு விட்- டனர். போட்டிக்கு முந்தைய நாளான இன்றைக்கும் பயிற்சி நடப்பது சந் தேகம்தான் என்று கூறப்- படுகிறது. முன்னெச்சரிக்கை நட- வடிக்கையாக ஆடுகளம் தார்ப்- பாயால் தொடர்ந்து மூடப்பட்டுள் ளது.

புயலால் பெய்த மழை காரணமாக ஈரமாகிவிட்ட சேப்பாக்க விளையாட்டுத் திடலை உலர்த்தும் வகையில் தகர டப்பாக்களில் நிலக்கரி எரியூட்டி வைத்துவிட்டு குளிர்காயும் ஊழியர்கள். படம்: டுவிட்டர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!