லண்டன்: கடந்த செவ்வாய்க் கிழமை லண் டன் குட்டிசன் பார்க் விளையாட்ட ரங் கில் நடந்த காற்- பந் தாட்டத்தில் ஆர்சனல் அணி- யை 2=1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து எவர்ட்டன் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து எவர்ட்டன் அணியின் நிர்வாகி ரோனால்ட் கோமென் உற்சாகத்- துடன் தனது அணியினரை வெகு வாகப் பாராட்டினார். யாரும் எதிர்க்க முடியாத, வலுப்பெற்று ஆளுமை படைத்த அணியாய் எவர்ட்டன் உருவெடுத்- திருப்பதாக கோமென், தன் விளை யாட்டாளர்களைப் பாராட் டி- னார். ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் எவர்ட்டனின் தற்காப்பு ஆட்டக்காரரான ஆஷ்லி வில்லி- யம்ஸ், ஆர்சனலுக்கு எதிராகக் கோல் போட்டு வெற்றிக்கு வித்திட்டார்.
ஆட்டம் தொடங்கி 20 நிமி டங்களுக்குப் பிறகுதான் எவர்ட்ட னின் விறுவிறுப்பைக் காணமுடிந்தது. "இதுபோன்ற ஆளுமை படைத்த குழுவைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அதைத்தான் ரசிகர் களும் விரும்புகிறார்கள்," என்றார் எவர்ட்டனின் நிர்வாகி கோமென். "சாதிக்க வேண்டும் என்ற விடாப் பிடியான வீரத்தை நேருக்கு- நேர் அவர்கள் காட்டினர். இது தொடக்கத்தில் அவர்களுக்குச் சற்று மோசமான விளைவைத் தந்தாலும், அவர்களுடைய ஆளு மைக்குப் பரிசாக வெற்றிக் கனியை அவர்கள் சுவைக்கத் தவறவில்லை. எதிரணியினரைத் தடுமாற வைக்கும் வகையில் கிடைத்த ஒவ்வொரு பந்தையும் முன்னுக்கு உதைக்காமல் பின்- னுக்குத் தள்ளினர். இதனால் செய்வதறியாது திக்குமுக்காடிய ஆர்சனல் அணியினர் இறுதியில் எவர்ட்டனிடம் தோற் றனர்," என்றார் கோமென்.
எவர்ட்டனின் தற்காப்பு ஆட்டக்காரர் ஆஷ்லி வில்லியம்ஸ் (வலமிருந்து இரண்டாவது), தனது அணியின் இரண்டாவது கோலை வலைக்குள் புகுத்தி எவர்ட்டனின் வெற்றியை உறுதி செய்தார். படம்: ஏஎஃப்பி