திண்டுக்கல்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளையர்களிடம் ரூ.25 லட்சம் மோசடி செய் தவரிடம் திண்டுக்கல் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 15 பேர் இது தொடர்பாக திண்டுக்கல் காவல்துறைக் கண்காணிப்பாள ரிடம் புகார் மனு அளித்துள்ளனர். "திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். அதை நம்பி அவர் கேட்ட தொகையைக் கொடுத்தோம்.
"எங்களைப் போல் பலர் அந்த நிர்வாகியிடம் தலா ரூ.3 லட்சம் வரை கொடுத்துள்ளனர். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை," என 15 பேரில் ஒருவரான தேவி பிரகலாதன் தெரிவித்துள்ளார். பணத்தை திருப்பித் தரக் கேட்டபோது, அந்த நிர்வாகி இழுத்தடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அந்த தனியார் நிறுவனம் செயல்பட்டு வருவ தாகவும் மேலும் பல இளைஞர்கள் ஏமார்ந்து போயிருக்க வாய்ப் புள்ளதாகவும் தேவி பிரகலாதன் மேலும் கூறினார். சம்பபந்தப்பட்ட நிர்வாகியை போலிசார் விசாரிக்கின்றனர்.