சென்னை: வர்தா புயலால் தமிழகத்தில் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட் டுள்ளது. புயலின் கோரத் தாண்ட வத்துக்கு 23 பேர் பலியாகி யுள்ளனர். சென்னையில் கரையைக் கடக்க சுமார் ஏழு மணி நேரம் எடுத்துக்கொண்ட வர்தா புயலின் சீற்றத்தால், சென்னை மாநகரில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக சென்னை மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
புயல் தாக்கியபோது சென்னையில் 192 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இதனால் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், 10 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்தன. சாலையோரங்களில் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்கள் மீது மரங்களும் மின் கம்பங்களும் விழுந்ததால், அவை பலத்த சேதமடைந்தன. வீடுகள், கடைகள், அலுவலகங்களின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. சில கட்டடங்களில் பொருத்தப் பட்டிருந்த கண்ணாடிகள் நொறுங்கின. விவசாய நிலங் களுக்கும் இந்தப் புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரில் 6 ஆயிரம் மரங்கள் புயலில் சிக்கி வேரோடு சாய்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. படம்: தகவல் ஊடகம்