புதுடெல்லி: பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், போதைப்பொருள் பயன்பாட்டால் மாணவ- மாணவியருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக நான்கு மாதங்களுக்குள் நாடு தழுவிய ஆய்வை நடத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாணவ - மாணவியரிடையே போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க தேசிய அளவிலான ஒரு செயல் திட்டத்தை இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஏற்படுத்தவும் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகள் தொடர்பான அறிவுரைகளைப் பள்ளிப் பாடத் திட்டத்தில் இணைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.