சிங்கப்பூரின் 4வது தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவிப்பு

சிங்கப்பூரின் நான்காவது தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கான உரிமத்தை 'TPG Telecom' பெற்றிருக்கிறது. தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் நேற்று இதனைத் தெரிவித்தது. ஆஸ்திரேலிய தொலைத் தொடர்பு நிறுவனமான TPG, $105 மில்லியன் ஏலக்குத் தகையை வென்றுள்ளது. இதற் கான அலைக்கற்றை ஏலம் நேற் றும் நேற்று முன்தினமும் நடை பெற்றது.

அலைக்கற்றைக்கான உரிமம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கும். அது தொடங்கும் நாளிலிருந்து 18 மாத காலத்திற்குள் நாடளாவிய வீதி மட்டத்திலான 4ஜி தொலைத்தொடர்பு வெளிப்புறச் சேவையை வழங்குமாறு TPG கேட்டுக்கொள்ளப்படும். அதன்படி, 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அச்சேவை தொடங்கப்பட வேண்டும். சுரங்கச் சாலைகள், கட்ட டங்களின் உட்புறப் பகுதிகள் போன்றவற்றில் கைபேசி இணைய வசதியை அந்நிறுவ னம் ஏற்படுத்துவதற்கான காலக்கெடு அது.

அத்துடன், சுரங்க எம்ஆர்டி பாதைகளிலும் ரயில் நிலையங் களிலும் உரிமம் தொடங்கும் நாளிலிருந்து 54 மாதங்களுக் குள் அந்நிறுவனம் தனது சேவையை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!