அதுல்யா: நடனம்தான் ரொம்பப் பிடிக்கும்

'காதல் கண் கட்டுதே' திரைப்படத்தின் நாயகியாக அறிமுகமாகி உள்ளார் அதுல்யா. முதல் படத்திலேயே பலரது கவனத்தைக் கவர்ந்துள்ளார். அதுல்யா என்றால் நிகரற்றவள் என்று அர்த்தமாம். "எனது உண்மையான பெயரைத்தான் படத்தில் எனது கதாபாத்திரத்துக்கும் சூட்டியுள்ளனர். இதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி," என்கிறார் அதுல்யா. அவர் பேசத் தொடங்கும் முன்பே அவரது கண்கள் பேசத் தொடங்குகின்றன. எப்படிக் கிடைத்தது இந்த முதல் பட வாய்ப்பு? "நான் திரைப்படங்களில் நடிப்பேன் என்பதை நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை. `ஃபிலிம் மேட்ஸ்' என்றொரு சினிமா சங்கம். நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ஓர் அமைப்பு. அதில் நானும் உறுப்பினராக இருந்தேன்.

"ஏற்கெனவே இதே படத்தைக் குறும்படமாக எங்கள் சங்கம் சார்பில் எடுத்திருந்தோம். அந்தக் குறும் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை வைத்துதான் முழு நீள சினிமாவாக எடுக்கத் திட்டமிட்டோம். அப்போது என்னிடம் நடிக்கக் கேட்டனர். அதனால் சம்மதம் தெரிவித்தேன். இப்படித்தான் நடிகையாக அறிமுகமாகி உள்ளேன்." 'காதல் கண் கட்டுதே'யில் உங்களுடைய அனுபவங்கள்? "படம் முழுக்க ஒருவிதப் புத்துணர்ச்சி தென்படும். இந்தத் தலைமுறை இளையர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இந்தக் கதை ரொம்பப் பிடிக்கும். ஏனெனில் கதையுடன் அவர்கள் தங்களைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். அதனால்தான் அனைவரையுமே கவரக்கூடிய ஒரு கதை என உறுதியாகச் சொல்கிறேன்.

"படக்குழுவில் இருந்த அனைவருமே பிறரது வேலைக ளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு, ஏதோ சொந்த வேலை மாதிரி கவனித்தோம். ஒரு கல்லூரி விழாவை முன்னின்று நடத்திய மாதிரியான உணர்வு அது." நடிப்பு தவிர வேறு எதில் ஆர்வம் உண்டு? "நீங்கள் நினைப்பதுபோல் நடிப்பதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. நடிப்பேன் என கனவில் கூட எதிர்பார்த்தது இல்லை. சின்ன வயதில் இருந்தே நன்றாக நடனம் ஆடுவேன். தேசிய அளவில் நடனப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். உண்மையில் நடனம் என்றால் எனக்கு உயிர்."

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!