புதுடெல்லி: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 'வர்தா' புயல் நிவாரண நிதி கேட்பதற்காக டெல்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஒரு தடவை கூட 'சின்ன அம்மா' பற்றிப் பேசவில்லை. அதனால் கோபத் தில் நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பிதுரை முதல் வரிடம் சொல்லிக்கொள்ளா மல் கோபத் தில் கிளம்பியது பரபரப் பாகப் பேசப்படுகிறது.
அதிமுகவில் ஒரு சாரார் சசிகலாவிற்கும் ஒரு சாரார் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவு தெரிவித்து வருகின்ற னர். இதில் சசிகலாவின் ஆதர வாளர் கள் ஒரு படி மேலே சென்று சசிகலா முதல்வராகவேண்டும் என்று பன்னீர்செல்வத்தின் பதவிக்கு வேட்டு வைக்கவும் ஆரம்பித்திருக்கின்றனர். சசிகலா பொதுச் செயலாள ராவதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்த பன்னீர் செல்வத்திற்குத் தன்னுடைய பதவியே பறிபோய்விடும் என்ற நிலை வந்ததும் இனி இப்படியே எல்லா வற்றுக்கும் ஆமாம் சாமி போடக் கூடாது என்ற முடிவு ட னேயே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 'வர்தா' புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளுக்குப் புயல் நிவாரண நிதி கோரி மனுக் கொடுப்பதற்காக 19ஆம் தேதி டெல்லி சென்றார்.
இந்நிலையில் சசிகலாவின் நம்பிக்கை நட்சத்திரமான நாடா ளு மன்றத் துணை சபாநாயகர் தம்பிதுரை முதல்வர் டெல்லி செல்வதற்கு முன்பாகவே அங்கு சென்று அவருக்காக விமான நிலையத்தில் காத்திருந்தார். தமிழக முதல்வர் வந்ததும் சசிகலாவின் உத்தரவின் பேரில் அவரைவிட்டு ஒரு நிமிடமும் அகலாமல் அவருடனேயே இருந்தா ர். பிரதமரைச் சந்தித்தபோதும் தம்பிதுரை உடனிருந்தார். பிரதமரிடம் 25 நிமிடங்கள் பேசிய முதல்வர் தமிழகத்திற்கு எந் தெந்தத் திட்டங்களுக்கு நிதிவே ண்டும் என்ற பட்டியலை அளித்தார்.
டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அங்கு இருக்கும் தமிழக இல்லத்தில் சிறப்புக் காவல்படையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. படம்: இணையம்