வங்கி மூலம் சம்பளம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வங்கி மூலம் சம்பளம் வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. தொழிலாளர்களின் சம்பளத்தை காசோலை, ஆன்லைன் முறையில் வழங்க அவசர சட்டம் வகை செய்கிறது.

அவசர சட்டத்தின்படி தொழிலாளர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்கக் கூடாது என்றும், தொழில் நிறுவன ஊழியர்களுக்கு மின்னணு முறையில் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்த அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணைந்து ரொக்கமில்லா இந்தியாவை உருவாக்க தனியார் நிறுவனங்கள் பல முன்வந்துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!