$343,000 திருடிய முன்னாள் சமூக சேவை ஊழியருக்குச் சிறை

வசதி குறைந்த குடும்பங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை அபக ரித்து ஆடம்பரப் பொருட்களில் செலவிட்டார் 33 வயது சியா குவாங் ஹுவீ. லூயி வுட்டன் ஆடம்பரப்பொருள் கடைகளில் மட்டும் $5,000க்கு மேலாகச் செலவு செய்தார். சமூக சேவை ஊழியரான சியா, 'காம்கேர்' எனப்படும் சமூ கப் பராமரிப்பு அறக்கட்டளை நிதி யிலிருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் $340,000க்கும் மேலாகக் கையாடல் செய்தார். வசதி குறைந்தவர்களுக்கு உதவ வேண்டிய பணம் இவரது பொறுப் பில் இருந்தது.

சியா தனக்கும் தனது உறவி னர்களுக்கும் தாராளமாகச் செலவு செய்துகொண்டார். விலை உயர்ந்த சுய அலங்காரச் சேவை கள், விலையான உணவுகள், விடு முறைகள், ஆடம்பரப் பொருட்கள் ஆகியவற்றுக்கு $110,000 செல விட்டார். தன்னுடைய கடன்களை யும் உறவினர்களின் கடன்களையும் அடைக்க சுமார் $130,000 பயன்படுத்தினார். சுமார் $100,000 பணத்தைக் குடும்ப உறுப்பினர் களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!