உச்ச அரசாங்க அதிகாரிகள் மூவரின் பொறுப்புகளில் ஜனவரி 1ஆம் தேதி முதல் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்ட அமைச்சின் நிரந்தரச் செயலாளரான 46 வயது திரு இங் ஹாவ் யூ ஜனவரி 1 முதல் கூடுதலாக சுகா தார அமைச்சின் இரண்டாம் நிரந் தரச் செயலாளரா கிறார். சு கா தா ர அமைச்சின் நிரந்தரச் செயலாளர் திரு சான் ஹெங் கீக்கு உதவியாக அமைச்சின் முன்னுரிமைத் திட்டங்களில் அவர் ஆதரவாக இருப்பார் என்று பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்தது.
மனிதவள அமைச்சின் நிரந்த ரச் செயலாளராக உள்ள 46 வயது திரு அவ்பெக் காம் ஜனவரி 1 முதல் தமது கூடுதல் பொறுப்பான தொடர்பு தகவல் அமைச்சின் நிரந்தரச் செயலாளர் பதவியைக் கைவிடுவார். அந்த அமைச்சின் 2ம் நிரந்தரச் செயலாளராக உள்ள 40 வயது திரு கேபிரியல் லிம், ஜனவரி 1 முதல் அதன் முழு நிரந்தரச் செய லாளராகிறார்.
(இடமிருந்து) திரு இங் ஹாவ் யூ, திரு அவ்பெக் காம், திரு கேபிரியல் லிம். படங்கள்: பொதுச் சேவைப் பிரிவு