வருமான வரித்துறையினர் சோதனை யைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து பி. ராம மோகன ராவ் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட் டுள்ளார். அவர் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்தவர். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்கப்பட்ட தொழில் அதிபர் சேகர் ரெட்டி, தாம் யாருக்கெல்லாம் உதவியாக வும் பினாமியாகவும் இருந்தார் என்பது பற்றிய விவரங்களைக் கூறியுள்ளார்.
அவர் அளித்த தகவலின் அடிப் படையில், ஜெயலலிதாவின் முதன்மைச் செயலாளராக இருந்து தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வுபெற்ற ராம மோகன ராவ் வீடு, அவரது மகன் விவேக், உறவினர் வீடுகள் உள்பட 14 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்றும் நேற்று முன்தினமும் அதிரடியாகச் சோதனை நடத்தினர். துணை ராணுவப் படையினர் உதவியுடன் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் பல கோடி ரூபாய் பணம், ஆவணங்கள், நூற்றுக்கும் அதிகமான கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையில் சேகர் ரெட்டி நடத்தி வரும் மணல் குவாரிகளில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய மற்றொரு விசாரணையில் ராம மோகன ராவும் சேகர் ரெட்டியும் கைத் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியது சேகர் ரெட்டி, அவரது நண்பர்கள் நால்வர் கைது; கோல்கத்தா தொழில் அதிபர் கைது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த அன்று இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.