4வது நீர் சுத்திகரிப்பு ஆலை 2020ல் செயல்படும்

சிங்கப்பூரின் நான்காவது நீர் சுத்திகரிப்பு ஆலையை வடிவமைத்து, கட்டி, அதைச் சொந்தமாக நிர்வகித்து நடத்தவிருக் கிறது கெப்பல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஹோல்டிங்ஸ் நிறுவனம். அந்தப் புதிய ஆலை உப்பு நீரையும் நீர்த்தேக்க நன்னீரையும் குடிநீராக மாற்றக்கூடிய ஆற்றலுடன் இருக்கும். கடல்நீரைக் குடிநீராக்கும் முறை மூல மாகவும் புதுநீர் (நியூ வாட்டர்) வழியாகவும் 2060ஆம் ஆண்டு வாக்கில் தண்ணீர் தேவையில் 85 விழுக்காட்டை தானே நிறைவேற்றிக்கொள்ள சிங்கப்பூர் திட்ட மிடுகிறது. இந்த இலக்கை நிறைவேற்றும் முயற்சியில் மேலும் ஒரு படியாக புதிய ஆலை அமையும்.

சிங்கப்பூர் தன்னுடைய குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக மலே சியாவிலிருந்து தண்ணீரைப் பெறுகிறது. இந்த இறக்குமதியைக் குறைத்துக் கொள்ளவும் புதிய ஆலை உதவும். மரினா ஈஸ்ட்டில் அமையும் புதிய ஆலை 2020ல் செயல்படும். அது அன்றாடம் சுமார் 137,000 கனமீட்டர் (சுமார் 30 மில்லியன் கேலன்) சுத்தமான குடிநீரை உருவாக்கும் ஆற்றல் கொண்ட தாக இருக்கும். எதிர்மறைச் சவ்வூடு பரவல் தொழில் நுட்பத்தின் மூலமாகவும் இதர அதிநவீன சவ்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யும் அந்த ஆலை கடல்நீரையும் மரினா நீர்த்தேக்கத்தின் நீரையும் சுத்தப் படுத்தும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!