தீபாவுக்காக வைக்கப்பட்ட பதாகை கிழித்தெறியப்பட்டது

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து அவரது தோழி சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்க வலி யுறுத்தி அக் கட்சியினர் பதாகைகள் வைத்துள் ளனர். சில இடங்களில் அந்தப் பதாகைகளில் உள்ள சசி கலா படங்கள் கிழிக்கப்பட்டன. இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசிய லுக்கு வர ஆர்வம் உள்ளதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவு தெரிவித்து ஒட்டப் பிடாரத்தில் தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பதாகைகள் வைக்கப் பட்டன.

நேற்று முன்தினம் இரவு அந்தப் பதாகையில் இருந்த தீபா படத்தை அதிமுகவினர் கிழித் தெறிந்துள்ளனர். திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ. கே.சவுந்திரராஜன் உள்ளிட்ட அதிமுகவில் இருந்து நீக்கப் பட்டவர்கள் இப்போது சசிகலாவுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர். சசிகலா வுக்கு எதி ராக ஒருவரைக் களத்தில் நிறுத்த வேண்டும் என்பதற்காகவே தீபா போன்றவர்களை முன்னிறுத்தி கீழறுப்பு வேலைகளை அவர்கள் செய்வ தாக அதிமுக விசுவாசிகள் கூறுகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!