சென்னை: கரூர் அன்புநாதனில் ஆரம்பித்த விவகாரம், நத்தம் விசுவநாதனை அடைந்து, வேலூர் சேகர் ரெட்டியிடம் சென்று, தற்போது தலைமைச் செயலர் ராம மோகன் ராவிடம் வந்து நிற்கிறது. இதுவரையிலும் கண்டுகொள் ளா மல் இருந்த வருமான வரித் துறை, ஜெயலலிதா மறைந்த பின் ஏன் இவ்வளவு துரிதமாகச் செயல் படுகிறது. இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது; சதி இருக்கிறது என்று சொல்லி, தமிழகத்தின் அரசியல் கட்சிகள் சில ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சாடுகின்றன. ஆனால், இந்த விஷயம் இன்று நேற்று ஆரம்பமானதல்ல. என்றைக்கு சசிகலா புஷ்பாவை (படம்) ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் வைத்து அடித்ததாக மேலவையில் சசிகலா புஷ்பா பரபரப்புக் கிளப் பினாரோ, அன்றைக்கே துவங்கி விட்டது பாஜகவின் ஆட்டம். சசிகலா புஷ்பா, மேலவையில் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு களை அள்ளி வீசிய பின், சில நாட்களில் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று அவர் கேட்க, தயாராக வைத்திருந்த மொத்த விஷயங்களையும் அவர் ஆதாரங் களுடன் எடுத்து வைத்தார். "ஒன் றும் கவலைப்பட வேண் டாம்; உங் களுக்குப் பாஜக அரசு பக்க பலமாக இருக்கும். "தமிழக ஆட்சி அதிகாரங்களின் மோசடி களை மட்டும் ஆதாரங்களு டன் திரட்டி எங்களுக்கு அனுப்பி வையுங் கள். "உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் விவரங் களைச் சொல்லி விடுகிறேன். அவர்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்," என்று பிரதமர் மோடி கூறியதாக தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.