வரும் 29ல் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வுசெய்யப்படலாம்

சென்னை: அதிமுக பொதுக்குழு வரும் 29ம் தேதி வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் ஜெயலலிதாவின் ஆருயிர்த் தோழி சசிகலா கட்சி யின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படு கிறார். முன்னாள் முதல்வர் ஜெய ல லிதா மறைவுக்குப் பின் ஆளுங் கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு யார் தேர்ந் தெடுக்கப்படுவார் என்ற எதிர் பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டது.

பல்வேறு பரபரப்பு களுக்கு மத்தியில் ஜெயலலிதா வின் தோழி சசிகலாவைப் பொதுச் செயலாளராக்க அதிமுக அமைச் சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மாவட்ட, மாநகர, நகரச் செயலாளர்கள் ஆதரவு தெரிவித் தனர். இதுதொடர்பாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக முக்கிய நிர்வாகி கள் சென்னை வந்து போயஸ்கார் டன் இல்லத்தில் சசிகலாவை நேரில் சந்தித்துவிட் டுச் செல்கின்ற னர். இதனால் விரை வில் கட்சியின் பொதுக்குழு கூட்டப் பட்டு அதில் சசிகலா பொதுச்செய லாளராக ஒருமன தாகத் தேர்ந்தெடுக் கப்படுவார் எனப் பேசப்பட்டது.

இந்த நிலையில் வரும் 29ம் தேதி வானகரம் ஸ்ரீவாரு மண்டபத் தில் அதிமுக பொதுக்குழு நடக்கி றது. இதில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். இதுதவிர அதிமுக அமைச்சர் கள், நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டச் செயலா ளர் களும் பொதுக் குழுவில் கலந்து கொள் கின்றனர்.

அதிமுகவினரால் 'சின்னம்மா' என்று செல்லமாக அழைக்கப்படும் ஜெயலலிதாவின் ஆருயிர்த் தோழி சசிகலா நடராஜன், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரும் ஆட்டோ ஓட்டுநருமான செந்தில் குமாரின் குழந்தைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தோழியும் முன்னாள் முதல் வருமான ஜெயலலிதாவின் நினைவாக அவரது பெயரைச் சூட்டினார். படம்: டுவிட்டர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!