மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே தான் டாவோ நகர மேயராக இருந்தபோது மூன்று குற்றவாளிகளைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதனால் அவர் மீது கொலை செய்த குற்றத்தின் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் குழு கூறியுள்ளது. இந்நிலையில், ரோட்ரிகோ மனித உரிமைகள் கண்காணிப் புக்குழு, அதிபர் டுட்டர்டே மீது தான் விசாரணையை தொடங்க வுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுபற்றிக் கருத்துக்கூறும் ஐநா மனித உரிமைகள் குழுவின் தலைவர் சையது ராட் அல் ஹுசைன் டுட்டர்டே அவரே கூறியுள்ளதை வைத்துப் பார்த் தால் அவர் கொலை செய்துள்ள தாக ஆகிறது என்றும் இது தொடர்பாக பிலிப்பீன்ஸ் நீதித் துறை அதிகாரிகள் விசார ணையை தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பீலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே மீது விசாரணையை தொடங்கப் போவதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ்