மீண்டும் விஜய் படத்தில் வடிவேலு

விஜய் படத்தில் மீண்டும் வடிவேலு நடிக்க உள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. 'ப்ரண்ட்ஸ்', 'பகவதி', 'வசீகரா', 'மதுர', 'சச்சின்', 'போக்கிரி', 'வில்லு', 'சுறா', 'காவலன்' ஆகிய விஜய் படங்களில் வடிவேலு நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்தப் படங்கள் வடிவேலு நகைச்சுவைக்காகப் பெரிய அளவில் பேசப்பட்டன. இந்நிலையில் அண்மைக் காலமாக நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு, தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

'பைரவா' படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்தில் வடிவேலு நடிக்கிறார். அண்மையில் வடிவேலுவை சந்தித்த அட்லீ, விஜய் படத்தின் கதையை அவரிடம் கூறியுள்ளார். கதை பிடித்துப்போனதால் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் வடிவேலு. இதனை வடிவேலுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் படம் விஜய்=வடிவேலு இணையும் பத்தாவது படமாகும். இப்படத்தில் ஏற்கெனவே, நான் கடவுள் ராஜேந்திரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!