திரைத்துறையில் விருப்பப்பட்டு கால்பதிக்க வில்லை என்கிறார் இளம் நாயகி டாப்சி. அண்மைய பேட்டி ஒன்றில், கட்டுப் பாடு என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். "விளம்பரம், மாடலிங் துறையில் ஆர்வம் இருந்ததால் அதில் ஈடுபட்டேன். அதன் மூலம் சினிமா வாய்ப்புத் தேடி வந்தது. அப்போதும் சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. "கைச்செலவுக்காகத்தான் நடிக்கத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் சினிமா ரொம்பப் பிடித்துப் போனது. அதில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டேன். "பொதுவாக சிறு வயது முதற் கொண்டே எனக்கு தன்னம்பிகை அதிகம். எதற்கும் பயப்படமாட்டேன்.
"மாடலிங் செய்த போது எனது தந்தை தூக்கம் இன்றித் தவித்தார். மற்றவர்கள் தவறாகப் பேசுவார்களோ என்று பயந்தார். "எனது படங்கள் விளம்பரங்க ளில் வெளியாகி நண்பர்கள் அவரைப் பாராட்டிய பிறகுதான் நிம்மதியானார். "சுற்றி இருப்பவர்களுக்குப் பயந்துதான் பெற்றோர்கள் பெண் களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் வளர்க்கிறார்கள். நானும் அப்படிப் பட்ட குடும்பத்தில் இருந்தே வந்து இருக்கிறேன். பெற்றோர்கள் கட்டுப் பாட்டில் இருந்தவரை வெளியுலகம் பற்றி எதுவும் தெரியவில்லை. "சினிமாவுக்கு வந்த பிறகு நண்பர்கள் மற்றும் வெளியாட்க ளுடன் பழகிய பிறகுதான் இந்த உலகத்தை முழுமையாகப் பார்த்தேன். இப்போது எனது பெற்றோர் நான் சொல்வதைக் கேட்கிறார்கள்.