ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் தாறு மாறாக கனரக வாகனத்தை ஓட்டிச் சென்று 12 பேர் மரணத் திற்குக் காரணமானவன் எனக் கருதப்படும் சந்தேக நபரை இத்தாலி போலிசார் நேற்று சுட்டுக் கொன்றனர். டுனீசிய நாட்டைச் சேர்ந்த அனீஸ் அம்ரி என்ற அந்த 24 வயது ஆடவர், மிலான் புறநகர்ப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தாக இத்தாலி உள்துறை அமைச்சர் மார்க்கோ மின்னிட்டி செய்தியாளர்களிடம் கூறினார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் (சிங்கப்பூர் நேரப்படி காலை 10 மணி) போலிசார் வழக்கமான சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அவ்வழி யாக வந்த அனீஸின் காரை நிறுத்தி சோதனையிட முயன்ற போது போலிசாரை நோக்கி அவன் சுட்டதாகவும் போலிசார் திருப்பிச் சுட்டதில் அவன் குண்டு பாய்ந்து பலியானதாகவும் திரு மார்க்கோ சொன்னார்.
அனீஸ் கொல்லப்பட்டது குறித்து அவர் விவரமாகச் சொல்லாவிட்டாலும் விசாரணை நடந்துவருவதால் இனிமேல் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனீஸ் அந்தப் பகுதியில் இருக்கலாம் என்று போலிசுக்குத் தகவல் கிடைத்ததாக இத்தாலிய நீதித்துறை வட்டாரங்கள் கூறின. கைரேகையைச் சோதித்ததில் மாண்டது அனீஸ்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அனீஸ் சுட்டதில் போலிஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்.