சிங்கப்பூரில் தரையிறங்க வேண் டிய நான்கு விமானங்கள் நேற்று முன்தினம் இந்தோனீசியாவின் பாத்தாம் தீவுக்குத் திருப்பி விடப் பட்டன. மோசமான வானிலையின் கார ணமாக இவ்வாறு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அந்த நான்கு விமானச் சேவைகளில் ஒன்றான தோக்கி யோவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமா னம் நான்கு முறை சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்று தோல்வியடைந்தது. பின்னர் அது பாத்தாம் தீவின் ஹாங் நடீம் விமான நிலையத்துக் குத் திருப்பி விடப்பட்டது.
அங்கு விமானத்தில் எரிபொருள் நிரப்பட் டது. பின்னர் ஐந்து மணி நேர தாமதத்துக்குப் பிறகு அந்த விமானம் சாங்கியில் தரையிறங் கியது. 259 பயணிகள் இருந்த SQ631 விமானச் சேவை பாத் தாமில் பிற்பகல் 2.49 மணிக்குத் தரையிறங்கி, பின்னர் அன்றிரவு 7.25 மணிக்குத் தான் புறப்பட்டது. சாங்கி விமான நிலையத்திற்கு இரவு 8.50 மணிக்கு அந்த விமானம் வந்து சேர்ந்தது. பாதிக்கப்பட்ட மற்ற மூன்று விமானச் சேவைகள்: ஹாங்காங் கிலிருந்து 104 பயணிகளுடன் சிங்கப்பூருக்கு வரவிருந்த டைகர் ஏர் விமானம், பிரிஸ்பேன் நகரிலி ருந்து 289 பயணிகளுடன் சிங்கப் பூர் வரவிருந்த சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் விமானம், தாய்லாந்தி லிருந்து 131 பயணிகளுடன் சிங் கப்பூர் வரவிருந்த சில்க்ஏர் விமா னம்.
படம்: பாத்தாம் தடையற்ற வர்த்தக மண்டல ஆணையம்