உதவி தேவைப்படும் டாக்சி ஓட்டுநர்களுக்கு நிதி

நிதிச் சுமையால் பாதிக்கப்பட்டு உள்ள கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவ னத்தின் டாக்சி ஓட்டுநர்களுக்கு நேரடி உதவி வழங்க அந்நிறுவனம் சிறப்பு நிதி ஒன்றை நாளை தொடங்கவுள்ளது. அந்நிறுவனத்தின் டாக்சி ஓட் டுநர்கள் நாளை நிறைவேற்றும் ஒவ்வொரு டாக்சி பதிவிலிருந்து 50 காசு இந்நிதியில் சேர்ப்பிக்கப் படும். இத்திட்டம் மூலம் குறைந்தது $50,000யைத் திரட்ட எண்ணி யுள்ள கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவ னம் எதிர்காலத்தில் மற்ற நிதி திரட்டு நடவடிக்கைகளுக்கு ஏற் பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

'கேபி ஹார்ட்‌ஷிப் பண்ட்' எனப்படும் டாக்சி ஓட்டுநர் இன் னல் நிதி மூலம், கம்ஃபர்ட்டெல் குரோ நிறுவனத்தின் நிதிப் பிரச் சினை உள்ள டாக்சி ஓட்டுநர் களுக்கு உதவி அளிக்கும். மேலும் அந்நிறுவனத்தின் டாக்சி ஓட்டுநர் மரணமடைந்து விட்டாலோ நிரந்த ஊனமடைந்து விட்டாலோ கடுமையான நாள்பட்ட மருத்துவப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டாலோ டாக்சி ஓட்டு நர்களின் உடனடி குடும்பத்தினருக் கும் நிதி உதவி அளிக்கப்படும்.

தனது மூன்று பிள்ளைகளுடன் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் நிதி உதவியைப் பெற்றுள்ள டாக்சி ஓட்டுநர் டேனியல் வூ. படம்: கம்ஃபர்ட்டெல்குரோ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!