பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு நூறு விழுக்காடு இடஒதுக்கீடு வழங்- கும் வகையில், மாநிலத் தொழிற் துறை சட்டத்தில் கர்நாடக அரசு திருத்தங்களை மேற்கொள்ள உள்ளது. இதனால் அங்கு வாழும் தமிழர், தெலுங்கர் உள்ளிட்ட பிற மொழியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் கன்னடர்- களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், இதற்கு ஏற்ற வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்- டம் நடத்தி வருகின்றனர். அரசு மற்றும் தனியார் துறை- களில் வேலைவாய்ப்பில் கன்- னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய சட்- டங்களை இயற்றவும் முடிவு செய்- துள்ளதாக தகவல் வெளியாகியுள்- ளது.
புதிதாக கொண்டுவரப்பட உள்ள தொழில் துறை சட்டத்தில் "கர்நாடகாவில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களில் உதவி- யாளர் உள்ளிட்ட 2ஆம் நிலைப் பணியாளர்களை நியமிப்பதில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்- களுக்கு 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதை வழங்காத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ரத்து செய்யப்படும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே வேளையில் பெங்களூரு வில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத்துறை நிறுவனங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது எனவும் குறிப்பிடப்- பட்டுள் ளது. இந்தப் புதிய சட்ட மசோதாவுக்குத் தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்துக் கர்நாடக முதல்வர் சித்தராமையா- வின் ஒப்புதலுக்காக இது அனுப்- பப்பட்டுள்ளது. இதற்கு சித்த- ராமையா இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்புதல் வழங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.