போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அச்சடித்த இருவர் கைது

சதர்பூர்: லிபோ ரூ.2000 நோட்டு அச்சடித்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுப் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் புதிய நோட்டுகளைச் சிலர் நகல் எடுத்துப் போலி நோட்டுகளை புழக்கத்தில் விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம், சதர்பூரின் லவ்குஷ் நகரில் நேற்று நடைபெற்ற சோதனையில் வண்ண அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி 2000 ரூபாய் நோட்டு களை அச்சடித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!