நிறுத்த இடமிருந்தால்தான் கார் வாங்க முடியும்: புதிய விதி

புதுடெல்லி: கார் அல்லது எந்தவொரு வாகனத்தையும் வாங்குவதற்குப் பதிவு செய்யும்போது, அதனை நிறுத்த வீட்டில் பார்க்கிங் வசதி இருக்கிறது என்பதற்கான ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டியதைக் கட்டாயமாக்கும் புதிய விதியை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. "இது குறித்து நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். போக்குவரத்து அமைச்சரிடமும் மாநிலங்களின் உயர் அதிகாரிகளிடமும் பேசியுள்ளேன். இது தொடர்பாக புதிய விதி உருவாக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது," என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்திடம் இருந்து இது குறித்து வந்துள்ள பரிந்துரை பரிசீலிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரி கூறியுள்ளார். வாகன நிறுத்துமிடம் இல்லாமல் ஏராளமான வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க இந்த விதி உதவும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!