துருக்கி விமானத் தாக்குதலில் சிரியாவில் பலர் மரணம்

டமாஸ்கஸ்: சிரியாவில் ஐஎஸ் வசம் உள்ள பகுதியில் துருக்கி விமானத் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட 88 பேர் பலியானதாக தகவல்கள் கூறின. சிரியாவில் ஐஎஸ் குழுவை ஒடுக்கும் பணியில் அண்டை நாடான துருக்கியும் ஈடுபட்டுள்ளது. சிரியாவின் வடக்குப் பகுதியில் ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாகக் கருதப்படும் அல்பாப் பகுதியில் துருக்கியப் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் குழந்தைகள் உள்பட பலர் பலியானதால் இந்தத் தாக்குதலை மிக மோசமான தாக்குதல் என மனித உரிமை கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 2 துருக்கி வீரர்களை உயிருடன் எரித்த காணொளியை ஐஎஸ் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!