பெர்லின்: ஜெர்மனியில் ஒரு பேரங்காடி நிலையத்திற்கு அருகே தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருந்தவர்கள் என்று சந்தே கிக்கப்பட்ட இருவரை கைது செய்திருப்பதாக அந்நாட்டுப் போலிசார் தெரிவித்துள்ளனர். கொசோவோவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களை சந்தேகத்தின்பேரில் போலிசார் கைது செய்துள்ளனர். நெதர்லாந்து எல்லையை ஒட்டிய ஒபர்ஹசென் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தைக் குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவ்விரு சகோதரர்களும் கைது செய்யப் பட்டதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பெர்லின் தாக்குதல் தொடர்பில் அவ்விருவரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. பெர்லின் தாக்குதலை அடுத்து ஜெர்மனியில் போலிசார் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு களைச் செய்துள்ளனர். பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தைப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஒருவன் லாரியை ஓட்டிச் சென்று கூட்டத்தினர் மீது மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். சுமார் 49 பேர் காயம் அடைந்தனர். பெர்லின் தாக்குதலைத் தொடர்ந்து ஜெர்மனியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.