ரஜினிகாந்துடன் '2.O' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் ஏமி ஜாக்சன். படப்பிடிப்பில் எப்போதும் அரட்டை அடித்துக்கொண்டு இருக்கும் ஏமி, ரஜினி அமைதியாக இருப்பதைப் பார்த்து தானும் அமைதி காக்க ஆரம்பித் திருக்கிறாராம். கோலிவுட்டில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நடிகைகளால் கூட ரஜினியை நெருங்க முடியாத நிலையில் லண்டனில் இருந்து தமிழுக்கு வந்துள்ள ஏமி ஜாக்சன் '2.O' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக் கிறார். 'எந்திரன்' படத்தின் முதல் பாகத் தில் நடித்த ஐஸ்வர்யா ராய் வேடத்தை '2.O' படத்தில் ஏமி ஜாக்சன் தொடர்கிறார். அதோடு ரஜினிக்கு ஜோடி, 'ரோபோ' என்று இரண்டு கதாபாத்திரங்களில் ஏமி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தான் நடித்து வரும் படப் பிடிப்புத் தளங்களில் எப்போதுமே சக நடிகர் நடிகைகளிடம் அரட்டையடிப்பது ஏமி ஜாக்சனின் வழக்கம். அப்படித்தான் இந்த படத்தில் நடிக்கும்போது இந்தி நடிகர் அக்ஷய்குமார் உள்பட படக்குழுவினர்களிடம் அரட் டையில் ஈடுபட்டு வந்திருக்கிறார் ஏமி. ஆனால் இப்படத்தின் நாயகனான ரஜினிகாந்த் தான் நடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்தபடி படப்பிடிப்பில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை உன்னிப்பாகக் கவனிப்பாராம். யாராவது அவரிடம் பேசினாலும் ஓரிரு வார்த்தையோடு முடித்துக் கொண்டு அடுத்து தான் நடிக்க வேண்டிய காட்சிப் பற்றி விவாதித்துவிட்டு அதற்கு தன்னைத் தயார் செய்துகொண்டு இருப்பாராம்.
இதைப் பல நாட்களாக பார்த்து வந்த ஏமி ஜாக்சன் தானும் படப்பிடிப்புத் தளத்தில் அதிகமாகப் பேசுவதை குறைத்துவிட்டு அடுத்து நடிக்க வேண்டிய காட்சிகளில் எப்படி நடிப்பது என்பது பற்றி யோசிக்க ஆரம்பித்து ரஜினிக்கு இணையாக நடிக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாராம். அதையடுத்துத் தனது திடீர் அமைதி குறித்து கேட்ட உதவி இயக்குநர்களிடம் "ரஜினி சாரிட மிருந்துதான் நான் இந்த அமைதியைக் கற்றுக் கொண்டேன்.